அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச யெலகப் பிரிவில் அமைந்துள்ள மிகப் பின்தங்கிய கிராமமான செங்காமம் கிராமத்தில் வாழும், நிரந்தரத் தொழிலும் நிரந்தர வருமானமும் இல்லாத குடும்பங்களிற்கு மீட்சி அமைப்பு தொடர்ச்சியான உதவிகளை வழங்கி வருகின்றது.
லண்டனில் வாழும் Brian Chen அவர்களின் நிதி உதவியில், இக்கிராமத்தில் வாழும் இரண்டு பெண்தலைமைக் குடும்பங்களிற்கும் மாற்றுத் திறனாளி குடும்பமொன்றிற்கும் வாழ்வாதார உதவியாக ஆடுகள் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளன.
திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள விநாயகர்புரம் – 3 கிராமத்தில் வாழும் பெண்தலைமைக் குடும்பத்தின் தலைவி க. நாகம்மாவின் பழமரச் செய்கைக்காக மாங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
நன்றி
நிர்வாகம்>
மீட்சி – லண்டன்
33
Like this post