மீட்சி அமைப்பு, மட்டக்களப்பு – குடும்பிமலைப் பிரதேசத்தில் வாழும் யுத்தத்தில் கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியும் நான்கு பிள்ளைகளின் தந்தையுமாகிய பரமானந்தம் என்பவருக்கு, அவரது விசாயத் தோட்டச் செய்கைக்கு தண்ணீர் இறைக்கும் இயந்திரம் (Watter Pump) மற்றும் கரண்ட் இணைப்புக்கான பொருட்களை வழங்கியுள்ளது.
குடும்பிமலையில் மரக்கறி மற்றும் சேனைச் செய்கையில் ஈடுபட்டு வரும் பரமானந்தம், மழையை நம்பியும் அயல் தோட்டக்காரர்களின் தண்ணீர்ப் பம்களின் உதவியுடனும் தனது தொழிலை மேற்கொண்டு வந்தார். நிரந்தரமான தோட்டச் செய்கையில் ஈடுபட தனக்கு தண்ணீர்ப் பம் அவசியமானது என்ற கோரிக்கையை ஏற்று, அவருக்கு மின்சாரத்தில் இயங்கும் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் கரண்ட் இணைப்புக்கான பொருட்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன.
பரமானந்தம், நிரந்தரமான விவசாயச் செய்கையை மேற்கொள்வதற்கும், அதனூடாக நிரந்தரமான வருமானத்தைப் பெற்றுக் கொள்ளவும் இவ்வுதவி உறுதுணையாக அமையும். பரமானந்தம் உள்ளுர் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார் என்பது மகிழ்ச்சியான விடயமே.