மீட்சி அமைப்பு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான உதவித் திட்டங்களை மேற்கொள்வதனை பிரதான இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
அவ்வகையில், மட்டக்களப்பு சந்திவெளியில் இரு பெண் பிள்ளைகளுடன் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு, கொச்சிக்காய்த் தூள், மற்றும் அரிசி விற்பனைக்காக 31,000 ரூபா பெறுமதியான பொருட்கள் கடந்த 05.12.2020 ஆம் திகதி அன்று வழங்கப்பட்டன. கிரான் பிரதேச செயலக ஊழியர்கள் ஆலோசனைக்கமைய வழங்கப்பட்ட இப் பொருட்களைக் கொண்டு அக்குடும்பத்தினர் கொச்சிக்காய்த் தூள் அரைத்து விற்பனை செய்தும் அரிசி விற்பனை செய்தும் வருமானத்தைப் பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
09.12.2020 அன்று மட்டக்களப்பு கோறளங்கேணியில் ஐந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்குகோழிவளர்ப்பை மேற்கொள்வதற்காக 25,000 ரூபா பெறுமதியிலான கோழிக்கூடு, நாட்டு முட்டைக் கோழிகள் என்பன வழங்கப்பட்டன. மட்டக்களப்பில் இயங்கி வரும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அமைப்பினரிடமிருந்து அடைவைத்து பெறப்பட்ட ஐந்து மாதம் வளர்ந்த 19 முட்டைக் கோழிகள், 2 சேவல்கள் வாங்கப்பட்டு வழங்கப்பட்டன. இக்கோழிகள் மூலம் அடைவைத்து கோழிக் குஞ்சுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.
இவ் வாழ்வாதரா உதவிகளைக் கொண்டு அக்குடும்பங்கள் தொடர்ச்சியாக தொழிலொன்றை மேற்கொள்ள முடியும் எனவும் தொடர்ச்சியாக வருமானமொன்றைப் பெறவும் முடியும் என எதிர்பார்க்கின்றோம். அதற்கான வழிகாட்டல்களை மீட்சி அமைப்பும் பிரதேச செயலக ஊழியர்களும் தொடர்ந்து மேற்கொள்வார்கள்.
மீட்சி,
பிரதான வீதி, கிரான்.