மீட்சி அமைப்பு இலங்கையின் வடகிழக்கில் வாழும் மக்கள் மத்தியில்; வாழ்வாதார உதவிகள், இடர்கால நிவாரண உதவிகள், கல்விக்கான உதவிகள், மனிதாபிமான உதவிகள், வாழ்வெழுச்சி ஆதரவுத் திட்டங்கள் என்பனவற்றை மேற்கொண்டு வருவதுடன் சிறப்புப் பணியாக மிகப் பின்தங்கிய பிரதேசங்களில் அமைந்துள்ள பாலர் பாடசாளைகளின் வளர்ச்சிக்கான உதவித்திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம்
2021 ஆம் ஆண்டில், மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பிமலைக் கிராமத்தில் மூடப்பட்டு; கிடந்த “குமரன் பாலர் பாடசாலை”யை புன்னகை அமைப்புடன் இணைந்து மறுசீரமைத்து (பாடசாலையை சுத்திகரித்து, பெயின்ர் பூசி, தளபாடங்கள் பெற்றுக் கொடுத்து) திறந்து வைத்ததுடன், பொற்றோர்களுடன் இணைந்து தொண்டர் ஆசிரியரை நியமித்தும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப் பைகள் என்பவற்றை வழங்கியும் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்து வைத்தோம். தொண்டர் ஆசிரியருக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவாக மாதாந்த 8000 ரூபாவினை மீட்சி அமைப்பு வழங்கி; வருகினறது.
இவ்வருடம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கியதுடன், சீருடைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். சீர்குலைந்து இருந்த ஒரு பகுதி வேலியை சீரமைக்கத் தேவையான பொருட்களையும் வழங்கியிரு;கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப் பின்தங்கிய – பழங்குடி மக்கள் வாழும் கிராமமான முறுத்தானை கிராமத்தில் அமைந்துள்ள “விநாயகர் பாலர் பாடாசாலை” மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், சீருடைகள் என்பவற்றை வழங்கியிருக்கின்றோம். மாகாண சபையின் கீழியங்கும் இப்பாலர் பாடசாலை ஆசிரியருக்கு மாகாண சபை மாதந்தம் 4000 ரூபாவினை வேதனமாக வழங்கி வருகின்ற நிலையில், மீட்சி அமைப்பு மாதந்தம் 4000 ரூபாவினை ஆசியருக்கான ஊக்குவிப்புத் தொகையாக வழங்கி வருகின்றது.
கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரமந்தனாறு கிராமத்தில் இயங்கும் “கிளியான் முன்பள்ளி”, “மலையாளபுரம் கிராமத்தில் இயங்கும் “S K S பாலர் பாடாசலை” மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், சீருடைக்கான துணிகள் என்பவற்றை வழங்கியிருக்கின்றோம். மிகக் குறைந்த வேதனத்தில் நீண்ட காலம் பணியாற்றி வரும் ஆசிரியர்களது வருமானத்திற்காக பசு மாடு வாங்குவதற்கான கடன் வழங்கியிருக்கின்றோம்.
அம்பாறை மாவட்டம்
அம்பாறை மாவட்டத்தில், எல்லைக் கிராமமான பாணமையில் அமைந்துள்ள “ஒளியூட்டும் கரங்கள்” பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், சீருடைக்கான துணிகள் மற்றும் வேலியமைப்பதற்கு தேவையான கொங்றீட் தூண்கள் என்பவற்றை வழங்கியிருக்கின்றோம்.
அத்துடன் பாணமையில் இயங்கும் சிங்கள மொழி மூலப் பாலர் பாடாசாலையான “சுமுது பாலர் பாடசாலை” மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் சீருடைக்கான துணிகள் என்பவற்றை வழங்கியிருக்கின்றோம்.
மீட்சி அமைப்பின் இப்பணிகளை மேற்கொள்வதற்கு அதன் உறுப்பினர்கள் வழங்கி வரும் ஆதரவுகளுக்கு நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவினை வேண்டி நிற்கின்றோம்.
நன்றி
நிர்வகாம்,
மீட்சி – இலண்டன்.