• முகப்பு
  • மீட்சி
  • Projects
  • கலை
  • சமூகம்
  • அரசியல்
  • இலக்கியம்
  • அரசியல்
  • வழிபாடு
  • தொடர்புகளுக்கு
  • Subscribed Donations
Meedsi © All rights reserved.
+94 77 008 3912
  • மீட்சி
  • Projects
  • தொடர்புகளுக்கு
Meedsi Meedsi
  • முகப்பு
  • அரசியல்
  • சமூகம்
  • வரலாறு
  • வழிபாடு
  • கலை
  • இலக்கியம்
Subscribed Donation
Meedsi

மட்டக்களப்பின் தனித்துவங்கள்! -கிரான் விஜய்

Home / அரசியல் / மட்டக்களப்பின் தனித்துவங்கள்! -கிரான் விஜய்
By Vijey Edwin inஅரசியல், சமூகம், சமூகம், பிரதான கட்டுரைகள்

“வரலாறு, மொழி, பண்பாடு, சமூகக் கட்டமைப்பு ஆகிய நான்கு அம்சங்களில் மட்டக்களப்பின் தனித்துவம் வெளிப்படுகின்றது. ஒப்பீட்டளவில் இது தனிமைப்படுத்தப்பட்ட பிராந்தியமும் (Zone of Relative Isolation) ஆகும். இந்த தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு புவியியல், வரலாற்றுக் காரணங்கள் உள்ளன.” எனக் குறிப்பிட்டுள்ளார் மானிடவியலாளரான டெனிஸ் பி. மக்ஜில்வ்ரே.

பண்பாடு என்பது இசை, இலக்கியம், வாழ்க்கைமுறை, உணவு, ஓவியம், சிற்பம், நாடகம், திரைப்படம் எனப் பரந்த பொருளில் பயன்படுத்தப்படும் ஒரு சொல் என்பதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும். மானிடவியலாளர்களைப் பொறுத்தவரை பண்பாடு என்பது கலை, அறிவியல், நெறிமுறைகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

மானிடவியலாளரான டெனிஸ் பி. மக்ஜில்வ்ரே (Dennis B. McGilvray), அக்கரைப்பற்று, கொக்கட்டிச்சோலை ஆகிய இரு இடங்களில் விரிவான ஆய்வுகளைச் செய்தவர். அவர் எழுதிய “முக்குவர் வன்னிமை : இலங்கையின் மட்டக்களப்பில் தமிழர் சாதியும் தாய்க்குடிக் கருத்தியலும்” என்ற கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

டெனிஸ் பி. மக்ஜில்வ்ரே, Curcible of Confilct [மோதலின் உலைக்களம்] எனும் நூலிலும் மட்டக்களப்பின் சமூக – வரலாற்றின் தனித்துவமான பண்புகளை விபரித்திருக்கிறார். இந்நூல் பற்றிய அறிமுகக் கட்டுரையொன்றை எழுதியிருக்கிற க.சண்முகலிங்கம், மக்ஜில்வ்ரேயின் நூலின் உதவியுடன் மட்டக்களப்பின் சமூக – வரலாற்றின் தனித்துவமான பண்புகளை பின்வருமாறு அட்டவணைப் படுத்தியிருக்கிறார்.

  • பிராமணர் முக்கியம் பெறாத சாதிப் படிநிலை அமைப்பு.
  • சமயப் பன்மைத்தவம் (இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், பௌத்தர்).
  • தாய்வழிக் குடி மரபு.
  • சீதன முறை, கணவன் மனைவியின் தாய் வீட்டில் குடியிருத்தல் [Matrilocal Residence]
  • முக்குவரின் வீரமரபு அதாவது போர் வீரர்களாகவும் அரசாட்சி அதிகாரம் கொண்டோராகவும் முக்குவர் இருந்தனர் [Mertial Tradition]
  • சாதி மேலாதிக்கத்தை விட அரச அதிகார மேலாதிக்கம் அழுத்தம் பெற்று இருந்தமை.
  • வரலாற்று ரீதியில் ஆழமான வேர்களைக் கொண்ட முஸ்லிம் சமூகம் அருகருகே இருத்தல்.
  • வீரசைவ குருக்கள் வம்சம் பிராமண எதிர்ப்பு மரபை உடையதாக இருத்தல்.

மட்டக்களப்பு பற்றி விரிவான தகவல்களைத் தேடியறிந்து “மட்டக்களப்பு தமிழகம்” எனும் நூலை எழுதிய வி.சீ.கந்தையா, தனது நூலில்; மட்டக்களப்பின் தனித்துவமான அம்சங்களாக உணர்ச்சிக் கவிநலம், நாட்டுக் கூத்துக்கள், நீரரமகளிர், செந்தமிழ்ச் சொல்வளம், கண்ணகி வழிபாடும் அதனோடிணைந்துள்ள கண்ணகி சடங்கு – வழக்குரை – கொம்பு விளையாட்டு – தமிழ்க்குரவை – வசந்தன் ஆடல், மற்றும் புலவர் பரம்பரை, மருந்தும் மந்திரமும், வரலாறு என்பன பற்றி விபரித்திருப்பதுடன், திருமணமுறை – சமயம் – குலவிருதுகள் – பழக்கவழங்கங்கள் எனச் சில தனித்துவமான அம்சங்கள் பற்றியும் விபரித்திருக்கிறார்.

மட்டக்களப்பின் பழக்க வழக்கங்கள் பற்றிய விபரிப்பில், மருமக்கட்தாய முறை, தேங்காய் கலந்த உணவுண்ணல், தலைக்குத் தேங்காயெண்ணெய் பூசுதல், மங்கல நிகழ்ச்சிகளில் குரவை அயர்தல், நாட்டுக்கூத்து நிகழ்த்துதல் – பெண்ணடி முதுசம் போன்ற சேரநாட்டுடன் – மலையாளக் கரையுடன் தொடர்புற்றுக் காணப்படும் பழக்கவழக்கங்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் வி.சீ.கந்தையா.

வி.சீ.கந்தையா, மட்டக்களப்பின் ஆரியக் கலப்பற்ற மணமுறை பற்றி தனது நூலில் விபரித்திருக்கிறார். தொடர்ந்து, மட்டக்களப்பின் வேளாண் செய்கை, வேளாண் செய்கையின் போது பயன்படுத்தும் குழூஉக்குறிச் சொற்கள், பொலிப்பாடல்கள், ஓய்வு காலங்களில் மக்கள் மேற்கொள்ளும் வசந்தனடித்தல் மற்றும் நாட்டுக்கூத்து, கொம்பு விளையாட்டு, கண்ணகியம்மன் குளுத்திப்பாடல், கண்ணகையம்மன் வழக்குரை, பழந்தமிழர் முருக வழிபாடு என்பவற்றுடன், பழங்காலத் தொடர்புடைய ஆபரணங்கள் எனப்பல விடயங்கள் குறித்துக் குறிப்பிட்டிருக்கிறார்.

கலாநிதி சு.வித்தியானந்தன்; “ஈழ நாட்டிலே கிராமியக் கவிதை நலம் நிறைந்துள்ள பகுதி மட்டக்களப்பு, தேனுக்கும் பாலுக்கும் தழிழர் வீரத்திற்கும் பெயர் பெற்ற மட்டக்களப்பு, மக்கள் கலைகளைப்பேணி வளர்பதிலும் தலைசிறந்து விளங்குகின்றது. உணர்ச்சி கவிதை நிறைந்த மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் பல்வேறு துறைப்பட்டு, நிறைந்து வழங்குகின்றன. கிழக்கிலங்கையின் மூலை முடுக்குகளிலும் வயல் வெளிகளிலும் வீடுகளிலும் வீதியிலும் உலவும் இப்பாடல்களை..” என “மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்” எனும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

பேராசிரியர் மௌனகுரு “மட்டக்களப்புப் பிரதேசம் இந்தியாவினின்று வெகு தொலைவிலிருப்பதாலும் ஐரோப்பிய நாகரீகத்திற்குள்ளான இலங்கையின் பிரதான பகுதிகளிலிருந்து விலகியிருப்பதாலும் ஆரியமயமாக்கம், மேற்கு மயமாக்கம் என்ற இரண்டு பண்பாட்டுத் தாக்கங்களுக்குப் பெரிதும் உட்படாத பிரதேசமாகவே இருக்கின்றது. எனவே புராதன அடையாளங்களைத் தேடும் தமிழ்ப் பண்பாட்டாளருக்கு அரிய சுரங்கமாக இருப்பது மட்டக்களப்புத்தான். புராதன இலங்கைப் பண்பாட்டின் எச்சங்களைக் கூட மட்டக்களப்பின் மிகப்பின்தங்கிய கிராமப் பகுதிகளில்தான் காணமுடியும்.” என, வெல்லவூர்க்கோபாலின் “மட்டக்களப்பு வரலாறு – ஒரு அறிமுகம்” எனும் நூலுக்கு எழுதிய அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

பக்தவத்சல பாரதி, 2011 அக்டோபர் “காலச்சுவடு” சஞ்சிகையில் அவர் எழுதிய “யாழ்ப்பாணத்து நினைவுகள்” என்ற கட்டுரையில், “மரபுவழிப்பட்ட இந்த மூன்று வாழ்வு முறைகளும் (யாழ்ப்பாணத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்கள், சிங்கள மக்கள்) மூன்று வெவ்வேறு சமூக அசை வியக்கங்களைக் கொண்டுள்ளன” எனக்குறிப்பிடுகிறார். மேலும், “தமிழகத்தில் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ள தொன்மையைவிட ஈழத்தமிழர்கள் கொண்டுள்ள பாரம்பரியம், தமிழர்களின் தொன்மையை நன்கு விளக்குகிறது. தமிழ்ச் சமூகத்தின் தொன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் சேரர் தேசத்தையும் மட்டக்களப்பு, யாழ்குடா நாட்டையும் ஒப்பிட்டு அறிய வேண்டியது மிகவும் அவசியமாகும். மனித குலத்தில் தோன்றிய முதல் சமூக அமைப்பான தாய்வழிச் சமூக முறையை இத்தகைய ஒப்பிட்டு நிலையில்தான் மீட்டுருவாக்கம் செய்ய முடியும். சேர நாட்டில் காணக்கூடிய ‘மரு மக்கள்தாய முறை’ இன்னும் உயிர்ப்புடன் மட்டக்களப்பில் உள்ளது.” எனவும் குறிப்பிடுகிறார்.

அத்துடன் “…பண்டைய சேரர் தேசம் தொடங்கி மட்டக்களப்புவரை உள்ள பண்பாட்டுப் பிரதேசம் தாய்வழிப் பிரதேசமாக இருப்பதை அறிய முடிகிறது.” எனவும் “தமிழகத்தில் இன்று கண்ணகி வழிபாடு முற்றிலும் இல்லை. அது மாரியம்மன் வழிபாடாக முழுவதும் உருமாறிப்போய் நிற்கிறது. ஆனால் ஈழத்தில் கண்ணகி வழிபாடு உயிர்ப்புடன் இன்றும் காணப்படுகிறது. குறிப்பாக, மட்டக்களப்பில் 30க்கும் மேற்பட்ட கண்ணகி கோயில்கள் இன்றும் உள்ளன.” எனவும் “கூத்து ஆற்றுகையுடன் தொடர்புடையவர்களை ‘அண்ணாவியார்’ என்று மக்கள் அழைக்கின்றனர். இத்தகைய வழக்கத்தைத் தமிழகத்தில் அதிகம் காண முடியவில்லை.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மண்டூர் பிரதேச பிரயாணம், பிராமணியமும் ஐரோப்பியமும் அதிகம் கலக்காத ஒரு தனித்துவமான தமிழ்ப் பண்பாட்டினை தனக்கு உணர்த்தியதாகக் குறிப்பிட்டார் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள், அவர் தனித்துவமான மட்டக்களப்பின் பழக்க வழங்கங்கள் பற்றியும் அக்கறை கொண்டிருந்திருக்கிறார் எனக் குறிப்பிட்டிருக்கிறார் பேராசிரியர் மௌனகுரு, “நினைவில் நிலைத்தவை – பேராசிரியர் கா.சிவத்தம்பியின் மட்டக்களப்புடனான உறவுகள்” எனும் கட்டுரையில்.

அத்துடன், தேசத்துக் கோயில், ஊர்க்கோயில் என்ற பிரிவு, மட்டக்களப்புச் சமூகத்தையும் பண்பாட்டையும் புரிந்து கொள்வதற்கான திறவுகோல் எனவும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “மட்டக்களப்பின் மதம்சாராக் கட்டிடக் கலைகள்”, “மட்டக்களப்பின் பனையோலை வேலைப்பாடுகள்(கைவினைகள்)” போன்ற மட்டக்களப்பின் கலை வெளிப்பாடுகளின் ஆய்வுகள் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் வழிகாட்டுதலின் கீழுருவானவையாகும்.

கிருபா இராஜரெட்ணம், “புவியியலின் பல்வகைமையான பண்புகளை ஒரே இடத்தில் அவதானிப்பதற்கு ஏற்ற இடம் மட்டக்களப்பு எனலாம். எழில்மிக்க கரையோரத்தையும், வளம் மிக்க வாவிகளையும், நிலத்தை வரண்டு போகவிடாது நகருக்குள் ஊடுருவிப் பாயும் நீரோடைகளையும் (தோணா) தனித்துவமாகக் கொண்டு புவியியல் ரீதியில் என்றும் சிறப்பு மிக்கதுதான் மட்டக்களப்பு மாவட்டம்.” எனக்குறிப்பிட்டிருக்கிறார் 2011 தேனகம் மலரில் எழுதிய “மட்டக்களப்பு நகர் : – புவியியல் அமைவும் முக்கியத்துவமும்” எனும் கட்டுரையில்.

மேலும், மட்டக்களப்பின் புவியியல் ரீதியான இடம் சார் முக்கியத்துவமும் வெளியுருவவியல் ரீதியிலான அதன் கட்டமைப்பும் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனக் குறிப்பிடுகிறார் கிருபா இராஜரெட்ணம். வட கீழ் பருவப் பெயர்ச்சிக் காற்று, உள்நாட்டு நீர்நிலைகள் முக்கியமானவை என்பது அவரது கருத்து.

மட்டக்களப்பின் தனித்துவமான அம்சங்கள் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிற விடயங்களே இவை. இவை ஒவ்வொரு விடயம் குறித்தும் தகவல்களைச் சேகரித்துப் பாதுகாப்பதுவும், விரிவாக ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியமான பணிகளாகும்.

எனினும் மட்டக்களப்பிற்குரிய தனித்தவமான அம்சங்கள், இன்று வெகுதீவிரமான மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றது என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேவேளை இங்கு குறிப்பிடப்படாத வேறு சில தனித்துவமான அம்சங்களும் மட்டக்களப்பிற்குரியதாக காணப்படலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது.

உசாத்துணைகள் :

வி.சீ.கந்தையா 1964, மட்டக்களப்புத் தமிழகம்,

கலாநிதி சு.வித்தியானந்தன், 1962, “மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்”, பதிப்பாசிரியர்- இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக்குழு.

சி. மௌனகுரு, 2008 “நினைவில் நிலைத்தவை – பேராசிரியர் கா.சிவத்தம்பியின் மட்டக்களப்புடனான உறவுகள்” மட்டக்களப்பும் பேராசிரியர் சிவத்தம்பியும், மட்டக்களப்பு வாசகர் வட்டம்

க.சண்முகலிங்கம், 2011 “மட்டக்களப்பில் சாதி” – இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னை.

க.சண்முகலிங்கம், 2011, “இலங்கையின் கிழக்குக் கரையோரத்தின் தமிழர்களும், முஸ்லிம்களும் – இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்” , குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னை.

பக்தவத்சல பாரதி,(2011) யாழ்ப்பாணத்து நினைவுகள், காலச்சுவடு, அக்டோபர் – 2011

கிரான் விஜய்மட்டக்களப்பின் தனித்துவங்கள்
43
Like this post
91 Posts
Vijey Edwin
  • மலையக மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும் -3 -கருப்பையா பிரபாகரன்
    Previous Postமலையக மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும் -3 -கருப்பையா பிரபாகரன்
  • Next Postஅம்பாறை மாவட்டம் பிறந்த கதை! -துலாஞ்சன் விவேகானந்தன்
    மலையக மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும் -3 -கருப்பையா பிரபாகரன்

Related Posts

முறுத்தானைக் கிராம மாணவர்கள் கல்வி கற்க உதவுவோம்
projects சமூகம் சமூகம்

முறுத்தானைக் கிராம மாணவர்கள் கல்வி கற்க உதவுவோம்

Brian Chen அவர்களின் நிதி உதவியில் அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதார உதவி…
projects சமூகம்

Brian Chen அவர்களின் நிதி உதவியில் அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதார உதவி…

மீட்சியின் செயற்றிட்டங்கள் – மார்ச் , 2023.
projects சமூகம்

மீட்சியின் செயற்றிட்டங்கள் – மார்ச் , 2023.

மீட்சி…
projects சமூகம் பொது

மீட்சி…

Leave a Reply (Cancel reply)

Your email address will not be published. Required fields are marked *

*
*

Contact us

Director,

14 Elm Road, Chessington, Surrey, KT9 1AW,

UNITED KINGDOM.

tel : +44 7827911279

Contact Us

Coordinator,

Main street, Kiran,

SRI LANKA.

tel: +94 77 008 3912

Contact us

email

[email protected]

optimised

Copyright © 2020 Meedsi. All rights reserved.

Copy