மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள வாகரை செயலகப் பிரிவில் கடந்த கால யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட அங்கவீன சிறுவர்கள், பெற்றோரை இழந்த சிறுவர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பங்களில் வாழும் சிறுவர்கள், பழங்குடி சமூகங்களில் வாழும் சிறுவர்கள் என 250 சிறுவர்கள் போசக்கு குறைபாடு மற்றும் கல்வி கற்கும் வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றமை இனங்காப்பட்டுள்ளது.
இச்சிறுவர்களில் 150 சிறுவர்கள் போசக்கு குறைபாடான நிலையில் வாழந்து வருகின்றார்கள் என்றும் அறியப்பட்டுள்ளது. இதில் விசேட தேவையுடைய 31 சிறுவர்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அறியப்பட்டுள்ளது.
இப்பிரசேத்தில் போசக்கு குறைபாடான நிலையில் வாழந்து வருகின்ற 150 சிறுவர்களுக்கும் போசக்குப் பொதி வழங்கும் திட்டத்தினை மூன்று மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தும் செற்றிட்டத்தினை மேற்கொள்ளவது அவசியமானது என உணரப்பட்டுள்ளது.
மாதமொன்றிற்கு 2000 ஆம் ரூபா முதல் 3000 ருபா வரையிலான போசாக்குணவுப் பொதிகளை மூன்று மாதங்களுக்கு வழங்குவதன் ஊடாக இச்சிறுவர்களை ஆரோக்கிமான நிலையில் வாழ வழியேற்படுத்திக் கொடுக்கலாம்.
இனங்காணப்பட்ட விசேட தேவையுடயை மற்றும் மந்த போசக்கு குறைபாடான சிறுவர்களுக்கும் மூன்று மாதங்களுக்கான போசக்குணவுப் பொதிகளை வழங்கும் செயற்றிட்டத்தினை மேற்கொள்வதற்கு சமூக அக்கறையுடய அமைப்புக்களின் மற்றும் தனிநபர்களின் ஒத்துழைப்பினை வேண்டி நிற்கின்றோம்.
இணைந்து கொள்ளுங்கள்.
நன்றி
எ.விஜயரெட்ண (தொலைபேசி : 0770083912)
மீட்சி
சமூக மீட்சிக்கான செயற்றிட்டம்