எம்.ஐ.எம்.முஹியத்தீன் எழுதிய “இலங்கையில் இன முரண்பாடும் அதிகாரப் பரவலாக்கமும்” எனும் நூல் காத்தான்குடியில் வெளியீடப்பட்டது.
சித்திலெப்பை ஆய்வு மன்றத்தின் ஏற்பாட்டில், 31.03.2018 சனிக்கிழமை அன்று காத்தான்குடி “ஹிஸ்புள்ளாஹ்” மண்டபத்தில் நடைபெற்ற “முஸ்லிம் தேசியம் – எழுச்சி மாநாடு 2018” இல் இந்நூல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்விற்கு சித்திலெப்பை ஆய்வு மன்றத் தலைவர் மர்சூம் மௌலானா தலைமை தாங்கியிருந்தார். தமிழ்நாடு தென்னிந்திய பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் பேராசிரியர் சே.மு.மு.மகமதலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.
26
Like this post