மட்டக்களப்பின் வட பகுதியில் அமைந்துள்ள கோறளைப் பற்று வடக்கு (வாகரை)ப் பிரதேசம், கோறளைப் பற்று தெற்கு (கிரான்) பிரதேசத்தில் குடும்பிமலை முதல் வடமுனை வரையான பிரதேசம், ஏறாவூர்ப் பற்று (கரடியனாறு) பிரதேசத்தில் கொடுவாமடு முதல் புல்லுமலை வரையான பிரதேசங்கள் கடந்த முப்பதாண்டு கால யுத்தத்தில் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசங்களாகவும், யுத்தத்தில் மிகக் கடுமையாக பாதிக்கட்ட பிரதேசங்களாகவும் விளங்கியவையாகும்.
இப்பிரதேசங்கள் மாவட்டத்தின் பாரியளவான நிலப்பரப்பினைக் கொண்டிப்பதுடன், முழுமயாக விவசாயச் செய்கை இடம் பெற்று வந்த பிரதேசங்களாகும். இப்பிரதேசங்கள், விவசாயச் செய்கைக்கான வளமான மண்ணையும் நீர் வசதியையும் கொண்ட பிரதேசங்களுமாகும். இப்பிரதேசங்கள் அமைந்திருந்த கிராமங்கள், மிக நீண்ட காலமாக தன்னிறைவான விவசாயக் கிராமங்களாகவே விளங்கின.
பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள், கடந்த இறுதி யுத்த காலத்தில் முழுமையாக இடம் பெயர்க்கப்பட்டு, பின் மீள் குடியேற்றப்பட்டுள்ளர்கள். மீள் குடியேற்றத்தில் வீடுகள் கட்டப்பட்டு, மீன்சார வசதி செய்தும் கொடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளும் சீரமைக்கப்பட்டுள்ளன.
எனினும் போக்கு வரத்து வசதி, குடி நீர் வசதி, நீhப்பாசன வசதி போன்றன போதியளவில் விருத்தி செய்யப்படவில்லை. அமைந்தள்ள பாடசாலைகளும் ஆரம்ப நிலை (தரம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை) வகுப்புக்களை கொண்டனவாகவே உள்ளன.
குடியேறிய மக்களுக்கான தொழில் வாய்ப்புக்களும் இல்லாதுள்ளது. இப்பிரதேசம் பிரதானமாக நெற்பயிர்ச் செய்கை நடை பெறும் பிரதேசமான போதிலும், தற்;போதைய நெற்பயிர்ச் செய்கையில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளமையால் மக்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் முழுமையாக இல்லாது போயுள்ளது.
இப்பிரதேசங்களில் நடைபெற்று வருகின்ற பின்தங்கிய பொருளாதார நடவடிக்கைகளான சேனைப் பயிர்ச் செய்கை, நன்னீர் மீன்பிடி, மந்தை வளர்ப்பு என்பன போதிய தொழில் வாய்ப்புக்களையும் போதிய வருமானத்தையும் தருவதொன்றாக அமையவில்லை. இப் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக சேனைப் பயிர்ச் செய்கையில் மரவெள்ளி, சோளம், சிறு தானியங்கள் பியிரிடப்பட்டு வந்தன. இவை பின்தங்கிய பொருளதார நடவடிக்கைகளாகும்.
இந்த நிலைமைகளால் மீள் குடியேறிய மக்கள் மீண்டும் சிறு நகரங்களை நோக்கி இடம் பெயரத் தொடங்கியுள்ளனர். இந்த மக்கள் இடப்பெயர்வினைத் தூண்டுவதில் கல்வி வாய்ப்பின்மை, தொழில் வாய்ப்பின்மை பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.
அண்மைக்காலத்தில் குளங்களில் நன்னீர் குஞ்சு வளர்ப்பினை ஊக்குவிக்க மேற்கொண்ட முயற்சிகளால் இங்கு வாழும் மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் – வருமான அதிகரிப்பு – போசாக்குணவு கிடைத்தல் போன்ற நன்மைகள் கிடைத்துள்ளன.
அண்மைக்காலங்களில் சேனைப் பயிர்ச்செய்கையில் கச்சான் செய்கை பிரதான இடத்தினைப் பெற்று வருகின்றது. மழையை நம்பிய, உரப்பாவனை அற்ற கச்சான் செய்கை பருவ காலத்திற்கு ஏற்றதாகவும், உரப் பாவனை அற்றதாகவும், குறிப்பிடத்தக்க வருமானத்தையும் பெற்றுத் தருவதாகவும் அமைந்திருக்கிறது. அதே வேளை இப்பிரதேசங்களில் வாழும் வறிய விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு கச்சான் நடுகை, புல்லுவெட்டுதல், கச்சான் புடுங்குதல் என்ற வகையில் தொழில் வாய்ப்புக்களையும் வழங்கும் ஒன்றாகவும் கச்சான் செய்கை விளங்குகின்றது.
எனினும் தரமான விதைகைளப் பெறுதல், அறுவடையின் போது நல்ல விலை கிடைக்காமை போன்ற பிரச்சினைகளை கச்சான் செய்கையாளர் எதிர்நோக்கி வருகின்றனர்.
- தரமான கச்சான் விதைகளைப் பெறுவதில் தொடர்ந்து பிரச்சனைகள் காணப்பட்டு வருகின்றன.
- கச்சானை மூலப்பொருளாக கொண்ட தொழில்கள் வளர்ச்சியடையாததனால் பச்சைக் கச்சானை விற்கும் நிலையே காணப்பட்டு வருகின்றது.
- நீர்ப்பாசன வசதிகளை அமைத்து கச்சான் செய்கை மேற்கொள்வதற்கான மூலதன வசதியும் கச்சான் செய்கையாளரிடம் இல்லை.
- பச்சைக் கச்சானை சேமித்து காயவைத்து நல்ல விலைக்கு விற்கும் வசதிகளும் உருவாகவில்லை.
இப்பிரச்சனைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை முன்வைக்கும் போது, கச்சான் செய்கை வளர்ச்சியடைந்து, விவசாயிகளும் வறிய விவசாயக் கூலித் தொழிலாளர்களும் பெரும் நன்மைகளை அடைய முடியும். ஏல்லைப் புறங்களில் அமைந்துள்ள பெருமளவு நிலங்களை விவசாயச் செய்கைக்கு உட்படுத்தவும் முடியும்.
மீட்சி