மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகநேரி கிராமத்தில் “கிராமிய மீனவர் அமைப்பு” மேற்கொண்டு வரும் நன்னீர் மீன் வளர்ப்பு உற்பத்தி செயற்றிட்டத்தின் பராமரிப்புச் செலவுகளுக்காக மீட்சி அமைப்பினால் 50,000 ரூபா கடனுதவி, அமைப்பின் தலைவர் த. மகேந்திரன் அவர்களிடம் 17.08.2020 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டம், மட்டக்களப்பு பிரதேசத்திற்குத் தேவையான நன்னீர் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து வழங்கும் முதலாவது பிரதேசத் திட்டமாகும்.
சிறந்த முறையில் மீனவ அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டத்தின் மூலம் இக்கிராம நன்னீர் மீன் பிடியாளர்கள் மட்டுமன்றி மாவட்ட நன்னீர் மீன்வளர்ப்போரும் நன்மை அடையவுள்ளனர்.
இணைப்பாளர்,
மீட்சி.
63
Like this post