மீட்சி அமைப்பு 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டிலிருந்து. இலங்கையின் வட-கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் கஸ்டப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மத்தியில் உதவிச் செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், வடமாகாணத்தில் நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கியதுடன், மட்டக்களப்பு வாகனேரியில், வாகனேரி மீனவ சங்கத்தின் நன்னீர் மீன்குஞ்சு வளர்ப்புத் திட்டத்திற்கும் கடனுதவி வழங்கியுமிருந்தது.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில். மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நிறைகுறைந்த 20 சிறுவர்களுக்கு போசாக்குணவு வழங்கும் திட்டத்தினை பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டுப் பிரிவு, சிறுவர் மகளிர் அபிவிருத்திப் பிரிவு, சுகாதாரப் பணிமனை ஆகியவற்றுடன் இணைந்து மீட்சி அமைப்பு மேற்கொண்டிருந்தது.
ஒக்டோபர் மாதத்தில், தென்கைலை ஆதினத்தின் சிறுவர்களுக்கான போசாக்கு மா வழங்கும் திட்டத்தில் மீட்சி அமைப்பு இணைந்து செயற்பட்டது.
2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அம்பாறைப் பிரதேசத்தில் கொரேணா தொற்று அபாயம் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிற்கான உணவுப் பொருட்களை வழங்குவதற்கான நிதி உதவிகள் மீட்சி அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டிருந்து.
டிசம்பர் மாதத்தில், மட்டக்களப்பு நகரில் நான்கு பெண் பிள்ளைகளைக் கொண்ட பெண் தலைமைத்துவக் குடும்பமொன்றின் வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்வதற்காக, குடும்பத் தலைவி ஜெயந்தியின் இரவுணவு-சிற்றுண்டி நிலையத்தினை சீரமைப்புதற்கு மீட்சி அமைப்பு நிதியுதவி வழங்கியிருந்தது.
டிசம்பர் மாதத்தில், மட்டக்களப்பு சந்திவெளியில் இரு பெண்பிள்ளைகள் கொண்ட பெண்தலைமைத்துவக் குடும்பமொன்றின் வாழ்வாதாரத் தொழிலை மேம்படுத்துவதற்காக, குடும்பத் தலைவி சிவரஞ்சிதம் என்பவருக்கு கொச்சிக்காய் தூள் மற்றும் அரிசி விற்பனைக்குத் தேவையான மூலப் பொருட்கள் மீட்சி அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.
டிசம்பர் மாதத்தில், மட்டக்களப்பு குடும்பிமலையில் நான்கு பிள்ளைகளின் தந்தையும் மாற்றுத்திறனாளியுமான பரமானந்தம் என்பவரின் வாழ்வாதாரத் தொழிலான பயிர்ச்செய்கையை விருத்தி செய்வதற்காக தண்ணீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் மின் இணைப்புக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
டிசம்பர் மாதத்தில், மட்டக்களப்பு வாகரையில் மூன்று பிள்ளைகளின் தந்தையும் மாற்றுத் திறனாளியுமான தட்சணாமூர்த்தி என்பவரின் தேநீர்க் கடைக்குத் தேவையான காஸ் குக்கர் மற்றும் காஸ் சிலிண்டர் என்பவை வழங்கி வைக்கப்பட்டது.
டிசம்பர் மாதத்தில், தென்கைலை ஆதினத்தின் சிறுவர்களுக்கான போசாக்கு மா வழங்கும் திட்டத்தில் மீட்சி அமைப்பு இணைந்து செயற்பட்டது.
டிசம்பர் மாதத்தில், மட்டக்களப்பு கோறளங்கேணியில் ஐந்து பிள்ளைகள் கொண்ட பெண்தலைமைத்துவக் குடும்பமொன்றின் குடும்பத் தலைவி சின்னப்பிள்ளை என்பவரின் வாழ்வாதராத் தொழிலை மேம்படுத்துவதற்காக கோழிக் கூடும் நாட்டுக் கோழிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
டிசம்பர் மாதத்தில், மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நிறைகுறைந்த 20 சிறுவர்களுக்கு இரண்டாம் கட்டப் போசாக்குணவு வழங்கும் திட்டத்தினை பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டுப் பிரிவு, சிறுவர் மகளிர் அபிவிருத்திப் பிரிவு, சுகாதாரப் பணிமனை ஆகியவற்றுடன் இணைந்து மீட்சி அமைப்பு மேற்கொண்டிருந்தது.
டிசம்பர் மாதத்தில், வாகரைப் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டுப் பிரிவின் அவசர வேண்டுகேளையடுத்து, தீயினால் எரிந்த தாயாரின் மருத்துவ செலவிற்கும், அத்தாயின் பாலூட்டும் பிள்ளைக்கான பால்மாச் செலவினங்களுக்குமான மனிதாபிமான உதவி வழங்கி வைக்கப்பட்டது.
மீட்சி அமைப்பு, விசேட செயற்றிட்டமாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் குடும்பங்கள் மற்றும் பெண் தலைமைக் குடும்பங்களிற்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொழிலுக்கான உதவிகளை இக்குறுகிய காலத்திற்குள் வழங்கியிருக்கிறது. இவ்வுதவிகள் மூலம் அக்குடும்பங்கள் பொருளாதார நிலையில் மேம்பாடு அடைவதோடு எதிர்காலத்தில் தமது சுய பொருளாதாரத்தில் தங்கியிருக்கக் கூடிய நிலையை ஏற்படுத்தலாம் எனக் கருதுகின்றோம். இந்த நோக்கத்தினை நிறைவேற்ற மீட்சி அமைப்பு தொடர்ச்சியாக அக்குடும்பங்களின் பொருளாதார நடவடிக்கையை அவதானித்து ஆலோசனைகளையும் வழங்கும்.
இதனை விட, மிகப் பின்தங்கிய வாகரைப் பிரதேசத்தில் போசாக்குக் குறைபாடான 150 க்கு மேற்பட்ட சிறுவர்கள் இனங்கானப்பட்டு அவர்களுக்கான உதவிகளை வழங்குமாறு பிரதேச செயலகத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், சுகாதாரப் பணிமனையின் மாதாந்தப் பரிசீலினைகளின் பின் இனங்காணப்பட்ட நிறைகுறைந்த 20 சிறுவர்களுக்கான போசாக்குணவை வழங்கும் செயற்றிட்டத்தினை மீட்சி அமைப்பு மேற்கொண்டது. இரண்டு மாதாங்களாக போசாக்குணவுகள் வழங்கப்பட்டு வருவதுடன், அண்மைய சுகாதாரப் பணிமனையின் மாதாந்தப் பரிசீலினைகளில் அச்சிறுவர்களின் நிறை கூடியிருப்பதும் அறியப்பட்டுள்ளது.
அதே சமயம் வாகரைப் பிரதேசத்தில் நிலவும் போசாக்கு குறைபாடு பற்றி பல அமைப்புகளுக்கு தெரியப்படுத்தியதுடன் போசாக்கு உணவுகளை வழங்கி உதவுமாறும் வேண்டுகோளை முன்வைத்திருந்தோம். கனாடாவில் இயங்கும் ஊறுணி – TSA அமைப்பு விசேட திறனுடைய 31 சிறுவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபாய் பெறுமதியிலான போசாக்குவுணகளை மூன்று மாதங்களுக்கு வழங்க முன்வந்தது. முதல் மாதாப் போசாக்குணவு வழங்கப்பட்டுள்ளதுடன், இரண்டாம் மாதப் போசக்குணவு வழக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மிகக் குறுகிய காலத்தினுள் மீட்சியின் செயற்றிட்டங்கள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனை கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
மீட்சி அமைப்பின் உருவாக்கத்தில் பங்காற்றிய நண்பர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். மீட்சி அமைப்பின் செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கியும் நிதி உதவிகள் வழங்கியும் உதவிய பிரித்தானிய, நோர்வே, பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளில் வாழும் நண்பர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
மீட்சியின் செயற்றிட்டங்களை வட-கிழக்கில் செயற்படுத்தி வருகின்ற தொண்டர்கள் மற்றும் நண்பர்களுக்கும் நன்றிகள்.
2021 ஆம் அண்டில் மேலும் சிறப்பான முறையில் மீட்சியின் செயற்றிட்டங்கள் தொடரும். தொடர்ந்தும் மீட்சியின் செயற்றிடங்களுடன் இணைந்து பணியாற்றுமாறும் செயற்றிடங்களுக்கு உதவி வழங்குமாறும் உங்கள் அனைவரையும் நட்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
நன்றிகள்
நட்புடன்,
எட்வின் விஜயரெட்ண
சின்னத்துரை வடிவேல்
கந்தையா கிருபைநாதன்
ஜெயராஜ் குலசேகரம்
நவரெத்தினசிங்கம் வதனன்