மட்டக்களப்பு 40 ஆம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம், ஆனித்திங்கள் 7 ஆம் நாள் (21.06.2018) வியாழக்கிழமை இரவு கும்பம் எற்றலுடன் ஆரம்பமாகி, ஆனித்திங்கள் 14 ஆம் நாள் (28.06.2018) வியாழக்கிழமை தீர்த்தோற்றசவத்துடன் நிறைவு பெறும்.
ஆனித்திங்கள் 7 ஆம் நாள் (21.06.2018) வியாழக்கிழமை காலை திக்கோடை அம்பாரைப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனியும் சங்காபிஷேகமும் இடம் பெறுவதுடன் இரவு கும்பம் ஏற்றல் வைபவமும் இடம் பெறும்.
2 ஆம் நாள் ஆனித்திங்கள் 8 ஆம் நாள் (22.06.2018) வெள்ளிக்கிழமை பகல் விசேட திருச்சடங்கு இடம் பெறும்.
3 ஆம் நாள் ஆனித்திங்கள் 9 ஆம் நாள் (23.06.2018) சனிக்கிழமை 3 ஆம், 4 ஆம் வட்டாரம் ஊடாக அம்மன் ஊர்வலம் இடம் பெறும்.
4 ஆம்; நாள் ஆனித்திங்கள் 10 ஆம் நாள் (24.06.2018) ஞாயிற்றுக்கிழமை 1 ஆம், 2 ஆம் வட்டாரம் ஊடாக அம்மன் ஊர்வலம் இடம் பெறுவதுடன், அன்றிரவு தோரண திருச்சடங்கு இடம் பெறும்.
5 ஆம் நாள் ஆனித்திங்கள் 11 ஆம் நாள் (25.06.2018) திங்கட்;கிழமை விஷேட மதிய பூசை இடம் பெறும்.
6 ஆம் நாள் ஆனித்திங்கள் 12 ஆம் நாள் (26.06.2018) செவ்வாய்க்கிழமை மதிய பூசையும் அன்றிரவு திருநிலைச் சடங்கும் இடம் பெறும்.
7 ஆம் நாள் ஆனித்திங்கள் 13 ஆம் நாள் (27.06.2018) புதன்கிழமை காலை 9.00 மணிக்கு 40 ஆம் கிராமம் அற்புத விநாயகர் ஆலயத்தில் தீக்கட்டை எழுந்தருளப்ப பண்ணலும் பால்வார்த்தலும் அத்திமரம் வெட்டுதலும் இடம் பெறும்.
8 ஆம் நாள் ஆனித்திங்கள் 14 ஆம் நாள் (29.06.2018) வியாழக்கிழமை அதிகாலை தீ மிதித்தலும் பள்ளயச் சடங்கும் தீர்த்தோற்சவமும் இடம் பெறும். அததை; தொடர்ந்ர் சர்க்கரை அமுதுடன் அலங்கார உற்சவம் இனிதே நிiறுவுறும்.
அம்மன் ஆலய பிரதம பூசகர்கள் மாந்திரிக பரம்பரைப் பூசகர்களான அம்பிளாந்துறை திரு. சே.கோவிந்தராசா, அம்பிளாந்துறை திரு. சே. அருளம்பலம் ஆவார்கள். அம்மன் அலய உதவிப் பூகர்கள் அம்பிறாந்துறை திரு.செ.அமிர்தலிங்கம் 40 ஆம் கிராமம் திரு.சி.தெய்வநாயகம். கடுக்காமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய குரு சிவஸ்ரீ சா.சிவபாதம்.
எட்டாம் சடங்கு 05.07. 2018 வியாழக்கிழமை இடம் பெறும்.
இணையத்தள முகவரி : http://40mariammankovil.blogspot.com/