இளங்கலைஞர் மகேந்திரன் கேதீஸ்வரன் எழுதிய ‘கூத்தியல்‘ எனும் நூல் வெளியீடு அண்மையில் மட்/ முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் சிறப்புற இடம் பெற்றது.
நாகசக்தி கலை மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு நிகழ்வில், நூலின் முதல் பிரதியை ஆசிரியரின் பெற்றோரிடமிருந்து மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணாமூர்த்தி தினேஷ் பெற்றுக் கொண்டார். நூல் நயவுரையை கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அ.மோகனதாஸ், சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் த.மலர்ச்செல்வன், அபிவிருத்தி உத்தியோகத்தர் மு.நமசிவாயம் ஆகியோர் வழங்கினர்.
‘கூத்தியல்‘ நூல், நந்தியின் மகிமை, மனிசி எங்கே, உழவர் பெருமை, மதுவின் கொடுமை ஆகிய தலைப்புக்களிலான நான்கு கூத்துக்களை உள்ளடக்கியதாகும்.
21
Like this post