காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசித் திங்கள் திரக்குளிர்த்திச் சடங்கு 21.05.2018 திங்கட்கிழமை மாலை கடல் தீர்த்தம் எடுத்துவந்து திருக்கல்யாணக்கால் நடும் வைபவத்துடன் ஆரம்பாகின்றது. எட்டுத்தினங்கள் சடங்குகள் நடைபெற்று 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும்.
21.05.2018 திங்கட்கிழமை மாலை கடல் தீர்த்தம் எடுத்துவந்து திருக்கல்யாணக்கால் நடல், 22.05.2018 செவ்வாய்;க்கிழமை மாலை சடங்குப் பூசையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் நடைபெறுவதுடன், 23 ஆம் திகதியிலிருந்து 27 ஆம் திகதி வரை மதியப் பூசையும், மாலைப்பூசையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம் பெறும். 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் பொங்கலுக்கு நெல்குற்றல் வைபமும், 29 ஆம் திகதி உதயம் 4.30க்கு திருக்குளிர்ச்சி பாடலும் இடம் பெறும்.
04.05(?).2018 திங்கட்கிழமை எட்டாம் நாள், எட்டாம் சடங்கு பூசை இரவு இடம் பெறும். எட்டாம் சடங்கில் பொங்கல் இடல், நேர் கடன் கொடுத்தல் என்பன இடம் பெறும்.