19.10.2020 திங்கட் கிழமை வாகரையில் இருபது சிறுவர்களுக்கான சத்துணவுத் திட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலமைந்துள்ள வாகரை பிரதேச செயலகத்திலமைந்துள்ள கிராமங்களில், 150க்கு மேற்பட்ட போசாக்கு குறைபாடான சிறுவர்கள் வாழ்ந்து வருகின்றமை அறியப்பட்டுள்ளது. அச்சிறுவர்களுக்கு மூன்று மாத காலங்களுக்கு சத்துணவுகளை வழங்குவதன் ஊடாக அச்சிறுவர்கள் ஆரோக்கியமான நிலைக்கு மாற்றமடைவர்கள் என அப்பிரதேசத்தில் இயங்கும் சிறுவர்கள் நலன்புரி மற்றும் சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கமைய முதற் கட்டமாக “மீட்சி” அமைப்பினால் கடந்த 19.10.2020 சனிக்கிழமை நிறை குறைவான இருபது சிறுவர்களுக்கு சுமார் 1500 ரூபா பெறுமதியிலான முதல் மாதத்திற்கான பேசாக்குணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இணைப்பாளர்,
மீட்சி
கிரான்
மட்டக்களப்பு
66
Like this post