மீட்சி அமைப்பு, கடந்த ஓரண்டு காலமாக இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைக் குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக் குடும்பங்களின் வாழ்வாதாரத் தொழிலுக்கான உதவிகளையும் அக்குடும்பங்களில் வாழும் மாணவர்களின் கல்விக்கான உதவிகளையும் மேற்கொண்டு வந்துள்ளது.
இவ் உதவித் திட்டங்களிற்கு உதவி வழங்கிய சமூக ஆர்வலர்களுக்கு மணமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 2022 ஆம் ஆண்டில் இவ் உதவித் திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்வதற்கும் உத்தேசித்துள்ளோம்.
இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான உதவிகளை மேற்கொள்வதுடன், இலங்கையில் பின்தங்கிய கிராமங்களில் வாழும் வறிய குடும்பங்களிலும் விளிம்பு நிலை சமூகங்களில் வாழும் வறிய குடும்பங்களிலும் வாழும் மாணவர்களின் கல்விக்கான உதவிகளை வழங்குவதும் அவசியமானது எனக் கருதுகின்றோம்.
2022 ஆம் ஆண்டில் இந்நோக்கிலான உதவித்திட்டங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
அவ்வகையில், புதிய கல்வி ஆண்டில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும், புத்தகப் பைகளையும் வழங்கி, அம் மாணவர்கள் இடரின்றித் தமது கல்வியைத் தொடர்வதுற்கு வாய்ப்பை உருவாக்கி கொடுக்க முனைகின்றோம்.
அத்துடன் வறுமை நிலை காரணமாக தமது கல்வியைத் தொடர முடியாது இடர்பாடும் மாணவர்களுக்கு மாதந்த உதவிப் பணம் வழங்கி, அம் மாணவர்கள் இடைவிலகிச் செல்லாது தமது கல்வியை தொடர வசதி ஏற்படுத்திக் கொடுக்கவும் முனைகின்றோம்.
இச் செயற்றிட்டத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, இச் செயற்றிட்டத்தினை மேற்கொள்வதற்கான உதவிகளைப் புரியுமாறு வேண்டுகின்றோம்.
நன்றி
நிர்வாகம்,
மீட்சி அமைப்பு.