வாகரையில் போசாக்குணவுப் பொதிகள் வழங்கும் திட்டம்
மட்டக்களப்பு – வாகரை பிரசேத செயலகப் பிரிவில் போசாக்கு குறைபாடான 150 க்கு மேற்பட்ட சிறுவர்கள் வாழ்ந்து வருகின்றமை அண்மைக்காலச் சுகாதாரப் பரிசோதனைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.
நீண்ட கால யுத்தம், பொருளதாரப் பின்தங்கிய நிலை மற்றும் சுனாமி அனர்த்தம் போன்றவற்றினால் பாதிப்புக்களினால் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் பெருமளவான சிறுவர்களின் போசாக்கு குறைபாட்டிற்கு காரணமாகும்.
இப் பேசாக்கு குறைபாடான பிள்ளைகளுக்கு மாதமொன்றிற்கு 2000 ரூபா பெறுமதியிலான போசாக்குணவுப் பொதிகளை மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டு; என்ற சிபார்சினை பிரதேச செயலக சிறுவர் நலன்புரி மற்றும் சுகாதார அதிகாரிகள் முன்வத்திருக்கிறார்கள்.
இக்கோரிக்கையை அடுத்து, நிறைகுறைந்த இருபது சிறுவர்களுக்கான முதல் மாதப் போசாக்குணவு வழங்கும் முன்னெடுப்பில் 1500 ரூபா பெறுமதியான போசாக்குணவுப் பொதிகள் மீட்சி அமைப்பினால் கடந்த 19.10.2020 சனிக்கிழமை அன்று வழங்கி வைக்கப்பட்டது.
போசாக்கு குறைபாட்டுடன் வாழும் இச்சிறுவர்களின் போச்கு நிலையினை மேம்படுத்த உதவுமாறு சமூக அக்கறையுள்ள அமைப்புக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களை முன்வருமாறு கோருகின்றோம்.
நன்றி
இணைப்பாளர்,
மீட்சி,
கிரான், மட்டக்களப்பு.