புத்தளம் மாவட்டத்தின் அமைந்துள்ள முந்தல் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் வைகாசி மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது. பதினெட்டுத் தினங்கள் நடைபெறும் முந்தல் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம், மரபு தழுவியதாக நடைபெறவுள்ளது.
12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கரகம் பாலித்தலும், 14 ஆம் திகதி வியாழக்கிழமை வெளிக்கொடியேற்றலும், 20 ஆம் திகதி புதன் கிழமை அம்மனுக்கு மாலையிட்டு விழா வைபவமும், 21 ஆம் திகதி வியாழக்கிழமை திருக்கல்யாண நிகழ்வும், 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்த யாத்திரையும் – கரகம் பாலித்தலும், 23 ஆம் திகதி சனிக்கிழமை வஸ்திராபரணமும், 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு பாண்டவர் வனவாசம் புகும் காட்சியும் – கரகம் பாலித்தலும், 25 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு அர்ச்சுணன் தவநிலைக் காட்சியும், 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு அக்கினிக் குண்ட காவல் வைபவமும் நிகழும்.
இறுதித்தினமான 27 ஆம் திகதி புதன் கிழமை காலை 7.00 மணிக்கு தீ வளர்ப்புக் காட்சியும் இரவு 8.00 மணிக்கு தீ மிதிப்பு விழாவும் இடம் பெறும்.
உற்சவ காலப் பதினெட்டுத் தினங்களில் கரகம் பாலித்தல், சுவாமி ஊர்வலம், விசேட பூசை வழிபாடுகள் இடம் பெறும். கொடியேறிய தினத்திலிருந்து மகாபாரதக் கதைபடிக்கப்படும்.
தகவல் : உடப்பு நிருபர், 03.06.2018 ஞாயிறு, வீரகேசரி