மீட்சி அமைப்பு, கல்விக்கான மாதாந்த நிதி உதவி வழங்கும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. இக் கல்வி உதவித் திட்டத்தினை திரு அண்ணாமலையார் அறக்கட்டளை – கிரான், ஊறுணி – யாழ் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடா ஆகிய அமைப்புக்களுடன் இணைந்து மேற்கொள்ள மீட்சி அமைப்பு முன்வந்துள்ளது.
பெண் தலைமைக் குடும்பங்கள், மாற்றுத் திறனாளிக் குடும்பங்கள், வறுமையில் உள்ள குடும்பங்களில் வாழுகின்ற, குடும்பப் பொருளாதார நிலை காரணமாக தங்களது கல்வியை தொடர முடியாது கஸ்டப்பட்டு வருகின்ற நிலையில் வாழுகின்ற, கல்வி கற்கும் பிள்ளைகளை இனங்கண்டு, அவர்கள் தங்களது கல்வியை இடையூறுன்றித் தொடர மாதாந்த உதவித் தொகையை வழங்க மீட்சி அமைப்பு முன்வந்துள்ளது.
பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களின் ஆலாசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைய இவ் உதவித் திட்டத்தினை மேற்கொள்வதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கிரான் பிரதேச செயலகத்தின் கோரிக்கையை ஏற்று, மட்டக்களப்பு – ஜீவாபுரம், பாலையடித்தோணா எனும் கிராமத்தில் தாய்-தந்தையரை இழந்து சித்தியின் பராமரிப்பில் வாழும் மூன்று பிள்ளைகளில் ஏரம்பமூர்த்தி கேந்துஜன் (க.பொ.த. உயர்தரம்) ஏரம்பமூர்த்தி கேதிசா (க.பொ.த. சாதாரணதரம்), ஆகியவர்களிற்கு, கற்றலுக்கான நூல்களை வாங்குவதற்கு 2000 ரூபாவும் கல்விக்கான மாதாந்த உதவிப்பணமாக 3000 ரூபாவுமாக 5000 ரூபா வழங்கப்பட்டுள்ளது.
கிரான் பிரதேச செயலக ஊழியர்கள் மாணவி ஏரம்பமூர்த்தி கேதிசாவிடம் இவ் உதவிப் பணத்தினை வழங்கி வைத்தார்கள். இச் செயற்றிட்டத்தினை வட,கிழக்குப் பிரதேசங்களுக்கு அப்பால் மலையகத்திலும் நிடைமுறைப்படுத்த மீட்சி அமைப்பு உத்தேசித்துள்ளது.
இச் செயற்றிட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல நிதி உதவிகளை வழங்குமாறு வேண்டுகின்றோம்.
நன்றி
இணைப்பாளர்
மீட்சி அமைப்பு