மட்டக்களப்பு எல்லை வீதியிலமைந்துள்ள (புகையிரத நிலையத்திற்கு அருகாமையில்) ஸ்ரீ மகா நரசிங்க வயிரவர் சுவாமி ஆலய வருடாந்த சடங்கு விழா, ஆனித் திங்கள் 01 ஆம் நாள் (15.06.2018) வெள்ளிக்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, ஆனித் திங்கள் 08 ஆம் நாள் (22.06.2018) வெள்ளிக்கிழமை மாலை விசேட பூசைகளுடன் நிறைவு பெறும்.
ஸ்ரீ மகா நரசிங்க வயிரவர் சுவாமி ஆலய வருடாந்தச் சடங்கு விழா ஆனித் திங்கள் 01 ஆம் நாள் (15.06.2018) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு திருக்கதவு திறத்தலுடன் விசேட அபிஷேகப் பூசையுடன் ஆரம்பமாகும்.
16 ஆம் திகதி பூசையுடன் சடங்கு விழா நடைபெறும். 17 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொடிமரம் நிறுத்தும் சடங்கும், இரவு 9.00 மணிக்கு அடையாளம் எழுந்தருளப் பண்ணும் அடையாளச் சடங்கும் இடம் பெறும். அதனைத் தொடர்ந்து அம்மனின் ஆராத்திப் பிள்ளைகள் ஆலயத்தில் நிறுத்தப்படுவர். இந்நிகழ்வின் பின்னர் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
18 ஆம் திகதி பூசையுடன் சடங்கு விழா நடைபெறும். 19 ஆம் திகதியும் பூசையுடன் சடங்கு விழா நடைபெறும். 20 ஆம் திகதி நள்ளிரவு கும்பச் சடங்கு இடம் பெறும். 21 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு நெல்லுக்குத்தும் சடங்கு நடைபெறும்.
22 ஆம் திகதி அதிகாலை 3.00 மணிக்கு விநாசகப்பானை எழுந்தருளப் பண்ணலுடான சடங்கு நடைபெறும். பகல் 1.00 மணிக்கு சடங்கு ஆரம்பமாகும்.
வருடாந்த சடங்கு விழா காலத்தில் தினமும் அதிகாலை 3.00 மணிக்கும், பிற்பகல் 2.00 மணிக்கும் சடங்குகள் ஆரம்பமாகும்.
ஆலய பிரதம பூசகர் திரு.செ.தயாநிதி அவர்கள்.