கோறளைப் பற்று தெற்கு (கிரான்) பிரதேச சபையில், புலிபாய்ந்தகல் கிராமத்திலிருந்து மேற்கே பொலன்னறுவை மாவட்ட எல்லைக் கிரமாமமான வடமுனை வரையும், வடக்கே புணானை வரையும், தெற்கே கரடியனாறு வரையுமாக பரந்துள்ள அதி கஸ்டப் பிரதேசத்தில் பல்வேறு சிரமங்களின் மத்தியில் இயங்கி வந்த 15 பாலர் பாடசாலைகள், கொவிட் 19 தொற்று அபாயத்தின் பின்னர் மூடப்பட்டு விட்டன. இவ்வருட ஆரம்பத்தில் இப்பிரதேசத்தில் இயங்கிய பாலர் பாடசாலைகளின் விபரங்கள் பின்வருமாறு அமைகின்றன.
புலிபாய்ந்தகல் 12 மாணவர்கள்
கூழாவடி 08 மாணவர்கள்
குடும்பிமலை 10 மாணவர்கள்
புணானை கிராம சேவகர் பிரிவிலமைந்துள்ளவை
மயிலந்தன்னை 12 மாணவர்கள்
முள்ளிவட்டவான் 17 மாணவர்கள்
பழங்குடிகள் வாழும் கிராமங்களில் அமைந்துள்ளவை
முறுத்தானை 12 மாணவர்கள்
அக்குறாண 21 மாணவர்கள்
ஆறு கடந்து செல்ல வேண்டிய கிராமங்களில் அமைந்துள்ளவை
திகிலவெட்டை -1 32 மாணவர்கள்
திகிலிவெட்டை -2 10 மாணவர்கள்
பிரம்படித்தீவு 26 மாணவர்கள்
முறுக்கன்தீவு 12 மாணவர்கள்
வாகநேரி கிராம சேவகர் பிரிவிலமைந்துள்ளவை
வாகநேரி -1 22 மாணவர்கள்
வாகநேரி -2 32 மாணவர்கள்
பொலன்னறுவ எல்லையிலமைந்துள்ள கிராமங்களில் அமைந்துள்ளவை
வடமுனை 10 மாணவர்கள்
ஊத்தச்சேனை 15 மாணவர்கள்
2021 ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் பாலர் பாடசாலைகளை திறப்பதற்காக ஆலாசிக்கப்பட்டு வரும் நிலையில், இப்பிரதேசத்தில் இயங்கி வந்த பாலர் பாடசாலைகளை மீளத்திறப்பதில் பல பாரிய சவால்கள் காணப்படுகின்றன.
தொடங்கப்பட்ட முதலே 14 பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் போதியளவு வழங்கப்படாத நிலையே இருந்து வந்தது. தளபாட வசதிகள், குடிநீர் வசதிகள், கற்றல் சாதனங்களின் வசதிகள் போன்றவற்றிலும் பல குறைபாடுகள் காணப்பட்டு வந்தன.
பல மாதகாலமாக மூடப்பட்டுள்ள பாலர் பாடசாலைக் கட்டடங்களை சுத்திகரித்தல் – வர்ணம் பூசுதல், வேலிகளை சீரமைத்தல், கதவைச் சீரமைத்தல் போன்ற பணிகளையும் செய்ய வேண்டிய நிலையே காணப்படுகிறது.
இப்பிரதேசம் மிகப் பின்தங்கிய பிரதேசம் என்ற வகையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை, சீருடை, பாதணிகள் போன்றவற்றையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவையுமுள்ளது.
இப்பிரதேசங்களில் போசாக்கற்ற நிலை சகசமானதொன்றாக காணப்படுகின்ற நிலையில், மாணவர்களுக்கு போசாக்கணவை வழங்க வேண்டிய தேவையும் உள்ளது என சிறுவர் நலன்புரி பணியார்கள் கருத்துத் தெரிவித்துமுள்ளனர்.
இதேவேளை, கொவிட் தொற்று அபாயம் தொடரும் பட்சத்தில், இப்பாலர் பாடசாலைகளிலும் கொவிட் தொற்றுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டிய தேவையுமுள்ளது.
இலங்கையில் 2021 ஆம் ஆண்டு பாலர் பாடசாலைகளை மீளத்திறப்பதில், கொவிட் 19 தொற்று அபாயம் சவாலக அமையும். எனினும் இப்பிரதேசத்தில் பாலர் பாடசாலைகளை மீளத்திறப்பதில் பல பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டிவரும்.
இது ஒரு பெரும் பணி.
@மீட்சி