திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள, தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்ச்சி உற்சவப் பெருவிழா, 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 28 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு திருக்குளிர்ச்சி வைபவத்துடன் நிறைவு பெறுகின்றது. உற்சவம் தொடங்கி 03 நாள் வரையான சகல நிகழ்வுகளும் வழமையான நடைமுறையிலுள்ள வரன்முறைக்கு அமைவாக நடைபெறும்.
22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை: தலைவர், நிருவாகத்தினர் சகிதம் ஆலயக்கதவின் திறப்புக்களை வண்ணக்கர் திரு இ.மலரவன் அவர்கள் எடுத்துவர, மங்கள வாத்தியங்களுடன் அழைத்து வந்து, கப்புகனார் க.தங்கத்துரை அவர்களால் திருக்கதவு திறக்கப்பட்டு இரவுப் பூசை சிங்களக்குடியார் அனுசரணையுடன் நடைபெறும்.
23 ஆம் திகதி புதன் கிழமை அதிகாலை திருக்குடுக்கைக்கு மண் எடுத்தலும், ஏடு திறத்தலும் நடைபெறும். பகல், இரவுப் பூசையுடன் முதலாம் வீதி திருவிழா நடைபெறும். இத்தினப் பூசை அனுசரணையாளர்கள் குருக்கள் குடி பிரதிநிதியும் கட்டப்பத்தான் குடி பிரிதிநிதியும்.
24 ஆம் திகதி வியாழக்கிழமை பகல், இரவுப் பூசையுடன் முதலாம், இரண்டாம் வீதி திருவிழா நடைபெறும். அனுசரணையாளர்கள் கட்டப்பத்தான்குடி பிரதிநிதியும் கட்டப்பத்தான்குடி பிரதிநிதியும்.
25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் இரவுப் பூசையுடன் இரண்டாம் மூன்றாம் வீதி திருவிழாவும் நடைபெறும். அனுசரணையாளர்கள் விஸ்வப்பிரம குலத்தார் பிரதிநிதி
26 ஆம் திகதி சனிக்கிழமை பகல் இரவுப் பூசையுடன் முதலாம் இரண்டாம் மூன்றாம் வீதி திருவிழா நடைபெறும். அனுசரணையாளர்கள் அறுபது முன்னங்கைச் சவடிக்குடி பிரிதிநிதி, கட்டப்பத்தான் குடி பிரதிநிதி
27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்யாணக்கால் நடுதல் வைபவத்துடன் பகல் இரவுப் பூசையும் அலங்காரத் தேரில் அம்மன் கிராமப்பிரவேசமும் நடைபெறும். அனுசரணையார்கள் கோரைக்களப்புக்குடி பிரிதிநிதி, வேடக்குடிப் பிரதிநிதி, கோரளைக்களப்புக்குடி மற்றும் பொது மக்கள்
அன்றைய தினம் வெளிமடைப் பூசைகள் ஏற்றுக்கொள்ளப்படும். தண்டைக்காரனும் முல்லைக்காரனும் அனுசரணையாளர்கள்.
28 ஆம் திகதி திங்கட்கிழமை பொங்கலும், இரவுப் பூசையும் நடைபெறும். இரவுப் பூசையைத் தொடர்ந்து அம்மன் திருக்குளிர்ச்சி நிகழ்வுடன் உற்சவம் நிறைவடையும்.
30 அம் திகதி புதன் கிழமை வைரவர் பூசையும் மூன்றாம் சடங்கு வைபவமும் நடைபெறும்.