மட்டக்களப்பின் வடக்கில், கிரான் ஊரிற்கு மேற்கே, வயல் சூழ்ந்த மருதநிலத்தில், மாந்திரி ஆறு வார்த்த மணற்பரப்பில், கொக்கட்டி மரத்தடியில், ஏழு ஊர்கள் ஒன்று கூடி, பந்தலிட்டு, வைகாசி பதினைந்தாம் நாள் பௌர்ணமித் திதியில், மரபு வழிப்பூசை பொங்கல் மேற்கொண்டு, மாலை திருக்குளிர்த்தி செய்யும் சடங்குற்சவமான ‘வருடாந்த திருக்குளிர்த்தி‘ இவ்வருடம் 29.05.2018 நடைபெறும்.
வைகாசி பதினைந்தாம் நாள் (28.05.2018) பௌர்ணமித் திதியில், அயலிலுள்ள ஏழு ஊர்களிலிருந்தும் அம்மனை ஊர்வலமாக எடுத்துச் சென்று, மண்டபங் காவல் பண்ணி, பந்தலிட்டு, வைகாசி பதினைந்தாம் நாள் (28.05.2018), பௌர்ணமித் திதியில், மரபு வழிப்பூசை பொங்கல் பொங்கி கண்ணகி அம்மனுக்கு ஒப்புக் கொடுத்து, மாலை திருக்குளிர்த்தியாடி, வாழி பாடி திருக்குளர்த்தி நிறைவுறும்.
27.05.2018 ஞாயிற்றுக்கிழமை, கிரான் மகாவிஷ்ணு ஆலயத்திலிருந்து ஊர்வலமாக அம்மன் கிரான் ஊடாகப் புறப்பட்டு, கும்புறுமூலை கிராமத்தை அடைந்து, புலிபாய்ந்தகல் கிராமத்தின் ஊடாக கோராவெளியைச் சென்றடையும்.