வைகாசி மாதம் வரும் முதல் திங்களில் திருக்குளிர்த்தி நடைபெறும் மரபைக் கொண்ட, குடும்பிமலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திக்குளர்த்தி வைபவம், இவ்வருடம் 21.05.2018 திங்கட்கிழமை சிறப்புடன் இடம் பெற்றது.
கிரானிற்கு மேற்கே காடும் வயலும் குன்றும் சார்ந்த குடும்பிமலை ஊரில் அமைந்தருக்கிறது இவ்வாலயம். 1955 ஆம் ஆண்டுக்கும் 1960 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஆன்மீக நாட்டமுடைய பெரியோர்களாலும் போடிமார்களாலும் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக மலை அடிவாரத்தில் அம்மனையும் மலை உச்சியில் வேலையும் வைத்தனர். அக்காலத்திலிருந்து வைகாசி முதல் திங்கள் வருடாந்த உற்சவம் கண்டுவருகிறது.
வைகாசி ஆறாம் நாள் (20.05.2016 ஞாயிற்றுக்கிழமை) திருக்கதவு திறந்து வைகாசி ஏழாம் நாளில் வந்த வைகாசி முதல் திங்கள் – (21.05.2016 திங்கட்கிழமை) திருக்குளிர்த்தியுடன் பூசை இனிதே நிறைவுற்றது.
பிரதம குரு சந்திரசேகரம் மேகநாதன்.